மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடிந்த ரேகா... வைரலாகும் காணொளி!
பிரபல நடிகை ரேகாவின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்துமுடிந்த காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலைாகி வருவதுடன் வாழ்த்துக்கரளையும் குவித்து வருகின்றது.
நடிகை ரேகா
பாரதிராஜா இயக்கிய 'கடலோரக் கவிதைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.

முதல் படத்திலேயே ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தார்.
அதனை தொடர்ந்து, புன்னகை மன்னன், செண்பகமே செண்பகமே, என் பொம்ம குட்டி அம்மாவிற்கு, பாட்டுக்கு நான் அடிமை, ராசாவே உன்னை நம்பி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே ஜார்ஜ் ஹேப்பிஸ் என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷா என்கிற மகள் இருக்கிறாள்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் சிறிது காலம் தலைகாட்டாமல் இருந்த ரேகா மீண்டும் ஸ்ரீகாந்த், பூமிகா நடித்த ரோஜா கூட்டம் திரைப்படத்தில் பூமிகாவின் அம்மாவாக நடித்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார்.

அதன் பின்னர் குறிப்பிட்ட சில படங்களில் தலைக்காட்டிய இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 4லும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது மகள் அனுஷாவின் திருமண காணொளியை நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிர்ந்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |