நடிகை ரீமா சென்னின் மகனா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்
நடிகை ரீமா சென் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரீமா சென்
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ’மின்னலே’ படத்தின் மூலம் அறிமுகமான ரீமா சென், பின்பு பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.
தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தி தனக்கென்று தனி இடத்தையும் பிடித்திருந்தார். இவர் இந்தியில் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
கடந்த 2012ம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரீமா சென் 2013ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
இந்த குழந்தைக்கு ரத்ரவீர் என்று பெயர் சூட்டியுள்ள இந்த தம்பதிகள் தற்போது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.