விஷ்ணு ஒரு ஜென்டில்மேன்! சர்ச்சைகளுக்கு நடுவில் வைரலாகும் நடிகையின் பதிவு
“விஷ்ணுகாந்த் அப்படியானவர் இல்லை” என பிரபல சீரியல் நடிகையொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
திருமண வாழ்க்கை முடிவிற்கு வர என்ன காரணம்?
கடந்த மார்ச் மாதம் சீரியல்களில் ஒன்றாக நடிப்பதன் மூலம் காதலிக்க ஆரம்பித்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்கள் இருவரும் சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பதால் இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இதனை தொடர்ந்து இவர்கள் சரியாக 15 நாட்கள் வாழ்ந்து விட்டு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ளார்கள்.
இந்த நிலையில், சம்யுக்தா தன் மீதுள்ள நியாயங்களை நேரலையில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
பின்னர் நடிகர் விஷ்ணுகாந்த் பல பேட்டிகள் கொடுத்துள்ளதுடன், சம்யுக்தா சக நடிகருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பதனை ஓடியோவுடன் ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
இப்படியொரு நிலையில் சம்யுக்தா தன்னுடைய பெற்றோருடன் பிரபல ஊடகமொன்றிற்கு வந்து விஷ்ணுகாந்த் என்னை கொடுமைப்படுத்தியதாகவும் என்னை பாலியல் கொடுமைகள் பண்ணியதாகவும் அழுதுள்ளார்.
விஷ்ணுகாந்திற்கு சார்பாக களமிறங்கிய பிரபலம்
அதில், “நா உங்ககிட்ட ஒன்று மட்டும் சொல்லுறே..என்னுடைய இணைந்து வேலை செய்த அனுபவத்தில் கூறுகிறேன். விஷ்ணுகாந்த் ஜென்டில்மேன். அவர் அந்த இடத்தில் பெண்களுடன் அதிகம் பேசி பார்த்தது கூட இல்லை. என்னிடமே இரண்டு வார்த்தைக்கு மேல் பேசமாட்டார்.
விஷ்ணுகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்படி நிற்கும் போது இவ்வாறு நடந்தது தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மேலும் ஒரு மனிதனுக்கு அவரின் வாழ்க்கை சரியாக அமையவேண்டும்.
இல்லாவிட்டால் அடுத்த முறை எப்படி அமையும் என நினைக்க முடியாது. இதனால் அவசரபட வேண்டாம். அவரின் ரொபஷனல் லைஃப்பை அடுத்த லெவலுக்குக் கொண்டு போக என்னோட வாழ்த்துகள். விஷ்ணுவின் பர்சனல் நம்பர் கூட என்கிட்ட இல்ல. என் மனசுல இருந்ததை ஷேர் பண்ண மட்டும்தான் இந்தப் பதிவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன்,“ இதனை பார்த்த ரசிகர்கள்,“ அப்படியாயின் சம்யுக்தா எதற்காக இப்படியான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்.” என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.