நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டா? பொங்கி எழுந்த சீரியல் குழுவினர்- நடந்தது என்ன?
சின்னத்திரை நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
ரவீனா தாஹா
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ரவீனா தாஹா.
இவர், வெள்ளத்திரையில் பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன், டிமான் உள்ளிட்ட படங்களில் நடித்திலும் சின்னத்திரையில் தங்கம், பூவே பூச்சூடவா, மௌன ராகம் 2 போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து நடன கலைஞராகவும், போட்டியாளராகவும் இருந்து வருகிறார்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடன கலைஞர் மணியுடன் இணைத்து பேசப்பட்டார். ஆனாலும் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளதா?
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்” என்ற சீரியலில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். அந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியது.
மாறாக ப்ரோமோ வெளியாகி சில வாரங்களிலேயே ரவீனா அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக தற்போது நடிகை ஆர்த்தி சுபாஷ் நடித்து வருகிறார்.
சீரியல் ஆரம்பமாகி சில மாதங்கள் கடந்து விட்டாலும், ரவீனா சீரியலில் இருந்து திடீரென விலகியதால் தயாரிப்பாளர்கள் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் கொடுத்துள்ளது.
“ரவீனா இனி எந்த சின்னத்திரை சீரியலிலும் நடிக்கக் கூடாது ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் நடிக்க கூடாது என்று அவருக்கு ரெட் காடு கொடுக்கப்பட வேண்டும்..” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் DJD நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
ரவீனா தரப்பு விளக்கம்
.இது மீண்டும் சர்ச்சையாக வெடிக்க அதற்கு ரவீனா தரப்பில் இருந்து பதில் கொடுக்கபட்டுள்ளது.
அதாவது, “என் மீது புகார் கொடுக்கப்பட்டது உண்மை தான். எனக்கு ரெட் கார்ட் கொடுக்கவில்லை. மாறாக புகாருக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டது. அதனால் தான் நான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.. சீரியலில் இருந்து விலகியதற்கு தனிப்பட்ட விருப்பம் தான் காரணம்..” என பேசியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |