ரஜினிகாந்த்தை பார்ப்பதற்கு நடிகை செய்த செயல் - வைரல் காணொளி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்க ரமயா பாண்டியன் சென்றுள்ளார்.

ரம்யா பாண்டியன்
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது அவர் நடித்துவரும் படம் ஜெயிலர் 2.
இந்த படம் அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. மேலும் இந்த வருடமே இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படி இருக்க ரஜினிக்கு பல ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் நடிகை ரம்யா பாண்டியனுக்கு ரஜிகாந்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்போது அவர் வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரைலாகி வருகின்றது.

ட்ரெண்ட் வீடியோ
பிக் பாஸ் மூலமம் பல ஃபோடோ ஷூட்டுகளை நடத்தியும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அவர் திருமணம் செய்துகொண்டதால் தற்போது பஞ்சாப்பில் செட்டில் ஆகி இருக்கிறார்.
சூழல் இப்படி இருக்க ரஜினியை சந்திக்க வாய்ப்பு அமைந்ததை அடுத்து தனது வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அவசர அவசரமாக வந்துள்ளர்.

இந்த காணொளியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் "ரஜினியை சந்திப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த ஃபோன் வந்த 30 நிமிடங்களில் பஞ்சாப்பிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருக்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.
அந்த காணொளியில் அவருக்கு புத்தகம் ஒன்றையும் அன்பளிப்பாக ரஜினி கொடுத்துள்ளார். சாருகசி என்ற ஆடியோ நாடகத்துக்காக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்திக்க பஞ்சாப்ல இருந்து சென்னை வந்த ரம்யா பாண்டியன் 🥰😍🎇❤️ pic.twitter.com/5YzloBlxuf
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) May 23, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |