'நான் கர்ப்பமாக இருந்தபோது கலா மாஸ்டர் இதை செய்தார்' - நடிகை ரம்பா ஓபன் டாக்
கலா மாஸ்டரின் கௌரவ விருது விழாவின் போது நடிகை ரம்பா அவரை பற்றி சில விஷயங்கள் பகிர்ந்திருந்தார்.
நடிகை ரம்பா
சினிமா நடனத்துறையில் 40 ஆண்டுகளாக புகழுடன் பயணித்து வரும் கலா மாஸ்டருக்கு கௌரவமாக, சென்னை நகரில் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு, கலா மாஸ்டரின் சாதனைகளைப் பாராட்டினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரம்பா, கலா மாஸ்டரை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்தார்.
இது இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகின்றது. "எனக்கு நடனத்தில் வணக்கம் சொல்லிக் கொடுத்தது கலா மாஸ்டர் தான்," என்று தொடங்கிய அவர், கலா மாஸ்டரை முதன் முதலாக ஊட்டியில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் பார்த்ததாக நினைவு கூறினார்.
பின்னர் “ஊட்டியில் ஒரு படப்பிடிப்பில் நாலு நாளில் ஐந்து பாடல்கள் எடுக்க வேண்டிய சவாலான சூழ்நிலையில், எதையும் கடந்து நடத்தியவர் கலா மாஸ்டர்.
கேரவன் இல்லாமல் காரில் உடை மாற்றும் காலம் அது. தயாரிப்பாளருக்கு ஏற்றபடி பணியாற்றக்கூடியவர். தனக்காக எதுவும் வேண்டாமெனும் நேர்மையுடன், குடும்பத்துக்காக உழைக்கும் ஒரே ‘இரும்பு பெண்மணி’ அவர்தான்,” எனக் கூறினார்.
கர்ப்ப காலத்தில்
“என் மீது அதிக அக்கறை உள்ளவர்களில் கலா மாஸ்டர் முக்கியமானவர். என் வளைகாப்பு கனடாவில் நடந்தபோது, திடீரென வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
விழாவில் நானே ஆடவில்லை, நான் எட்டு மாத கர்ப்பமாக இருந்தபோதும், மாஸ்டர் என்னை ஆட வைத்தார்,” என்றார் அவர். மேலும், “எது நடந்தாலும் முதலில் கலா மாஸ்டரிடம் தான் சொல்லுவேன்.
எப்போதுமே மற்றவர்களை மட்டும் கவனிக்கும் மாஸ்டர், இனிமேல் தன்னையும், தனது கணவரையும், குழந்தைகளையும் பற்றியும் நன்றாக நினைக்க வேண்டும்,” என உருக்கமாக கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |