லண்டனில் குடும்பத்துடன் குதூகல போஸ் கொடுக்கும் ரம்பா! அவருடைய கணவரா இது? - தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
லண்டனில் குழந்தைகளுடன் குதூகலமாக போஸ் கொடுக்கும் நடிகை ரம்பாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவிற்குள் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ரம்பா.
இவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி, தொடர்ந்து 'உள்ளத்தை அள்ளித்தா' வில் நாயகியாக அறிமுகமானார்.
இவருடைய முதல் படமே நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து நடிகை ரம்பா நிறைய சூப்பர் ஹீட் படங்களை கொடுத்தார்.
பின்னர் காலப்போக்கில் பட வாய்ப்புக்களை குறைய ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
லண்டனில் செட்டிலாகி ரம்பா
தற்போது குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார். சினிமா பக்கம் இருந்து விலகியிருக்கும் ரம்பா, அவருடைய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் லண்டனில் ஒரு ஹோட்டலில் குடும்பத்தோடு சாப்பிட போகும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் போது, “திருமணத்தின் போது இருந்த இந்திரகுமாரா இது? ” என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |