நடிகை ரம்பா வீட்டில் கொண்டாட்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்
நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை நடிகை ரம்பா திருமணம் செய்து கொண்டார்.
இவர் கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் தொழிலதிபராவார்.
திருமணத்திற்கு பிறகு ரம்பா குடும்பத்துடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
வைரலாகும் ரம்பாவின் குடும்ப புகைப்படம்
இந்நிலையில் மகன் ஷிவினின் நான்காவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரபல மால் ஒன்றில் அவர்கள் கொண்டாடிய படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் மகள் அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துவிட்டார். இதனை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.