80 கிலோ Weightlifting.. 6 வாரங்களாக படுத்த படுக்கையான ரகுல் ப்ரீத் சிங்- நடந்தது என்ன?
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த ஆறு வாரங்களாக படுத்த படுக்கையாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங்
இந்தி, தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இவர், தமிழை விட இந்தி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக கமல் ஹாசன் நடிப்பில் வெளியான “இந்தியன் 2” படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருப்பார்.
எப்போதும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் அதிக அக்கறை காட்டும் ரகுல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஜிம் ஒர்க்அவட் வீடியோக்களை பகிர்வார்.
படுத்த படுக்கையாக என்ன காரணம்?
இந்த நிலையில்,சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங் செய்த உடற்பயிற்சி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ரகுல், 80 கிலோ எடை கொண்ட வெயிட்லிப்டை தூக்கியுள்ளார். இதில் அவருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுக் கொள்ளாமல் படிப்பிடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். படிப்பிடிப்பு தளத்தில் அதிகமான வலி ஏற்பட்டு கடந்த 6 வாரங்களாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.
நடந்தது என்ன?
இது குறித்து பேசிய ரகுல் ப்ரீத் சிங்,“நான் செய்த முட்டாள் தனமான தவறு இன்று எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது.
அதிவிரைவில் நான் குணமடைய வேண்டும். ஒரே இடத்தில் தன்னம்பிக்கை இழந்து ஓய்வெடுப்பது எனக்கு எளிதான விஷயம் அல்ல. ஆனால் இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன்.
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட முதுகுவலியால் துடிதுடித்து போனேன். என் உடலின் கீழ் பகுதி என்னை விட்டு தனியாக பிரிந்தது போல் வலி அது. நான் இன்னும் 100 சதவீதம் குணமாகவில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் குணமாவேன்” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |