நடிகை ராதிகா வீட்டில் சோகம் - தாயார் கீதா காலமானார்!
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ராதிகாவின் தாயார் நேற்று இரவு காலமானார்.
நடிகை ராதிகா தாயார் காலமானார்
தமிழ் சினிமாவில் 1970களில் அறிமுகமாகிப் பல ஆண்டுகள் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டு இருப்பவர் ராதிகா. நிறைய கதாபாத்திரங்கள் நடித்து தற்போது ஹீரோக்களின் அம்மாவாக நடித்து பிஸியாக இருந்து வருகிறார் ராதிகா.
இவரது தாயார் கீதா சென்னையில் வசித்து வந்த நிலையில், அவர் வயது மூப்பு காரணமாகக் காலமானார். இவருக்கு வயது 86 ஆகும். ராதிகாவின் தாயார் மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவி ஆவார்.
இவர் நேற்று 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போயஸ் கார்டன், சென்னை - 86 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |