நடிகர் சரத்குமார் வீட்டில் நடந்த விஷேசம்! தடல் புடலாக விருந்து வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த காதல் மனைவி ராதிகா.. இவ்வளவு பெரிய குடும்பமா?
நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாரின் பிறந்த்நாளை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்களை சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் மற்றும் அரசியல் பிரமுகருமான சரத்குமார் தனது பிறந்தநாளை கடந்த ஜூலை 14 ஆம் தேதி கொண்டாடினர்.
சரத்குமார் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ராதிகா தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார். இவர்களுக்காக அதற்காக ஒரு ஸ்பெஷல் விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.
சரத்குமாருக்கு பலர் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த வீடியோக்களை ஒன்றிணைத்து, ராதிகா ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ‘இரும்பு மனிதர், தங்கமான இதயம் கொண்டவர்’ என்ற கேப்ஷனுடன் அந்த பதிவை வெளியிட்டார்.
மேலும், “அவருக்கு கொடுக்க மட்டும் தான் தெரியும். இந்த உறுதியான, இரும்பு போன்ற மனிதர் எங்கள் வாழ்வில் கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம்.
நான் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று வார்த்தைகளால் கூற முடியவில்லை. உங்களுக்கு வாழ்வில் சிறந்தது மட்டுமே கிடைத்து, மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என் மனதின் ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன்.
ஹேப்பி பர்த்டே லவ்!” என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்திருந்தார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.