பாக்யராஜ் இறுதி ஊர்வலத்தில் நடிகை ராதிகா செய்த வேலை! காணொளி வைரல்
பாக்கியராஜின் இறுதி ஊர்வலத்தின்போது நடிகை ராதிகா கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாக்யராஜ் இறுதி ஊர்வலம்
நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி தற்போது மருத்துவமனையிலேயே அவர் உயிர் துறந்தார்.அவரின் உடல் இன்று அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பாக்கியராஜின் இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். இதன்போது நடிகை ராதிகா செய்த விடயம் காணொளியாக வைரலாகி வருகின்றது.
இயக்குனர் பாக்யராஜ் இறுதி ஊர்வலத்தில் கூட்ட நெரிசலால் விரக்தியாகி ராதிகா செய்த செயல்#Chennai | #Director | #Bhagyaraj | #Radhika | #PolimerNews pic.twitter.com/MajQ4801Sr
— Polimer News (@polimernews) June 28, 2026
வைரல் காணொளி
இறுதி ஊர்வலத்தில் மிகுந்த மனவேதனையுடன் இருந்த நடிகை ராதிகா, ஊடகத்தினரையும் யூடியூப் சேனல்களைச் சேர்ந்தவர்களையும் பார்த்து, "உங்களுக்கு டி.ஆர்.பி. வேண்டும் என்றால் நாங்கள் நடித்துக் கொடுக்கிறோம்.
ஆனால் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை தயவு செய்து கெடுக்காதீர்கள்" என்று கையெடுத்து கும்பிட்டபடி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த காணொளி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
ஆனால் ராதிகாவின் வேண்டுகோளுக்குப் பின்னரும் மாற்றம் உதுவும் இல்லாமல் கூட்டத்தின் வேகம் அலைமோதியது.

இறுதி ஊர்வலத்தின் போதும், கேமராக்களும் கூட்ட நெரிசலும் தொடர்ந்ததால் அந்த இடத்தில் அதிக சிரமம் இருந்தது.
இதனால் வேதனையின் உச்சத்தில் இருந்த ராதிகா, தனக்கு அருகில் நின்று கொண்டிருந்தவர்களை கைகளால் விலக்கி, இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்ல பாதையை உருவாக்கிக் கொண்டார்.
இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |