பிரமாண்டமாக நடந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்தம்: வைரல் புகைப்படங்கள்
கோலிவுட்டின் அப்போதைய ஹிட் இயக்குநர்களின் ஃபேவரட் ஹீரோயினாக இருந்தவர் ராதா.
இவருக்கு கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதில், கார்த்திகா நாயர், 2011ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கார்த்திகாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
கார்த்திகாவின் நிச்சயதார்த்தம்
யார் கார்த்திகாவின் வருங்கால கணவர், என்ன செய்கின்றார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது.
தற்போது நடிகை ராதா உத்தியோகபூர்வமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமான கார்த்திகா, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.
இவரது சகோதரி துளசி 'கடல்', 'யான்' படங்களில் நடித்துள்ளார். எப்போதும் தமிழ் சினிமாவின் தலைக்காட்டும் க்யூட் நாயகிகள் போல இல்லாமல் முதல் படத்திலேயே துணிச்சல் மிகு பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் நடிக்க வருவதற்கு முன்னரே 2009ஆம் ஆண்டில் ‘ஜோஷ்’என்ற தெலுங்கு படத்தில் இவர் அறிமுகமாகியிருந்தார்.
தற்போது அவர் படங்களில் நடிக்காமல் இருப்பதால், அவரது தந்தையின் தொழில்களை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
திரையுலகில்தான் ஆக்டிவாக இல்லையே தவிர, கார்த்திகா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
ஆனால் திரையுலகை விட்டு விலகியவர்கள் அவர்களாகவே திருமணம் குறித்த செய்திகளை வெளியிட்டால் மட்டும்தான் வெளியில் தெரியும்.
அந்த வகையில் கார்த்திகாவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். கையில் மோதிரத்துடன் யாரோ ஒரு ஆணை கட்டிப்பிடித்திருப்பது போன்ற அந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் பலர் லைக்ஸ்களை குவித்தும், கமெண்டுகளில் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
நடிகை கார்த்திகாவின் காதல் யார் என்ற தகவலை அவரே சில நாட்களுக்குள்ளாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்ப்பட்டது. இதற்கு பதில் கொடுக்கும் வகையில் நடிகை ராதா வெளியிட்டுள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் சந்தேகங்களுக்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |