புடவையில் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம்...
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புடவை அணிந்து புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகை ரச்சிதா
கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரச்சிதா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மக்களிடையே பிரபலமானார்.
அப்போது ரச்சிதாவை வனிதாவின் முன்னாள் கணவரான ராபர்ட் மாஸ்டர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் வெளியே வந்ததும் இருவரும் தங்களது வேலையை செய்து வருகின்றனர்.
சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் அசத்தி வருகின்றார். விவாகரத்திற்கு பின்பு புதிய கார், வீடு என வாங்கிய ரச்சிதா பெங்களூரில் செட்டிலாகியுள்ளார்.
இந்நிலையில் ரச்சிதா புடவையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.





| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |