இளநரையினால் அவதிப்படுகிறீர்களா? ஈஸியாக சரிசெய்து விடலாமாம்
இன்றைய நிலையில் சிறுவர்கள் முதல் பெண்கள், ஆண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானது இளநரை. சித்தமருத்துவத்தில் இதற்கான காரணங்களும் தீர்வுகளும் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இளநரை என்பது 30 வயதுக்குள் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்கிறார் சித்த மருத்துவர் டாக்டர். சித்த மருத்துவ நிபுணர் உஷாநந்தினி BSMS., MSc Biotech.
இன்று இளநரையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் இளநரை என்பது அதிகரித்துதான் வருகிறது.
இளம் நரை உண்டாக காரணங்கள் என்ன?
இளம் நரை உண்டாக காரணங்களில் முதன்மையானது அதிக கவலை, மன அழுத்தம் என்று சொல்லலாம்.
அதிகமான யுவி ரேடியேஷன் படும் போது, கூந்தலுக்கு ஸ்பா சிகிச்சைகள் செய்யும் போது, சுருளான கூந்தல் சிகிச்சை, ஸ்ட்ரெய்னிங் சிகிச்சை, வெப்பக்கருவிகள் பயன்பாடு போன்றவற்றில் அதிக கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இவையும் இளநரையை உண்டாக்கிவிடுகிறது.
உடலில் சத்து குறைபாடு காரணங்களாலும் இளநரை உண்டாகிறது.
வெள்ளை முடி என்னும் நிலை என்னும் போது மெலனின் சுரப்பும் இருக்காது. மெலனோசைட்டுகள் செல்கள் அளவும் குறைவாக இருக்கும். இந்த பருவத்தில் தலைமுடி வளர்ச்சியும் பாதிக்கப்படும். இளநரையும் அதிகமாக உருவாகும்.
இளநரையை போக்க என்ன செய்வது?
இளநரை இருக்கும் போது பித்தத்தை சரி செய்ய உணவு முறையில் கரிசலாங்கண்ணி கீரை, கீழா நெல்லி, நெல்லிக்காய் ,கறிவேப்பிலை போன்றவற்றை சேர்க்கும் போது இரத்தத்தில் இருக்கும் பித்தத்தின் தன்மை மாறும்.
அப்போது ஏற்கனவே இருக்கும் முடியின் நிறத்தில் மேல்கொண்டு வளரும் போது முடியின் நிறம் கருப்பாக மாறக்கூடும். இது ஒரே நாளில் நடக்காது. படிப்படியாக மாற்றும்.
ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்யுங்கள்
வைட்டமின் பி12, வைட்டமின் பி 3, கால்சியம், காப்பர், ஜிங்க் போன்ற தாதுக்கள் எல்லாமே முடியின் நிறத்தை மாற்றும் தன்மை கொண்டவை. தோல் நோய் அலோபீசியா, ஹைப்போதைராய்டு, பொடுகு தொடர்ந்து இருப்பவர்கள், சொரியாசிஸ் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்தால் போதுமானதாக இருக்கும்.
உடலில் பித்தத்தின் மாற்றம் காரணமாக தான் இளநரை என்றால் தினசரி உணவில் கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் சாறு, கரிசலாங்கண்ணியை தேனில் குழைத்து சாப்பிடுவது போன்றவற்றை தொடர்ந்து செய்தாலே இளநரை மறைவதை உணரலாம்.
