கணவருக்கு காலைக் கழுவி பூஜை செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகை - நெட்டிசன்களின் ஆதங்கம்!
தமிழ் சினிமாவில் உதயம் படம் மூலம் அறிமுகமானவர் ப்ரணிதா. இதையடுத்து, கார்த்தியுடன் சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சூர்யாவுடன் மாஸ், ஜெய்யுடன் எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பிரணிதா சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரின் பிறந்த நாளில் கர்ப்பாக இருப்பதாக அறிவித்தார்.
பின் ஜூன் மாதம் பிரணிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், கடந்த நாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவனுக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அதாவது, தென்னிந்தியா முழுவதும் பீமா அமாவாசை தினம் கொண்டாடப்பட்டது. பார்வதி தேவிக்கு சிவபெருமான் அவருடைய பக்தியை புரிந்துகொண்டு ஆசீர்வதித்த நாள் தான் பீமா அமாவாசை தினம்.

இந்த தினத்தில் கணவருக்கு, பாத பூஜை செய்யும் மனைவி நீண்ட ஆயுள் கூடி எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது.
அதன்படி, நடிகை பிரணிதாவும் தனது கணவருக்கு பாதபூஜை செய்து கொண்டாடியுள்ளார். இப்புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பல விமர்சனங்களை கூறி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.