50 வயதான பின்னர் இந்த நடிகை என்ன பண்றாங்கன்னு தெரியுமா? சிங்கப்பெண் நடிகை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி துணை நடிகையாக இருப்பவர் பிரகதி.
இவர் பல முன்னணி நடிகர்களுக்கு தாயாகவும், அண்ணியாகவும் நடித்து ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்துள்ளார்.
திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பிரகதி, நிஜ வாழ்க்கையில் உடற்பயிற்சி மற்றும் பவர் லிஃப்டிங்கில் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

பிரகதி மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் மற்றும் விருதுகளை வென்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பிரகதி பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார்.
போட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

50 வயதான பிரகதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பின்னர் விவாகரத்து பெற்ற அவர், மறுமணம் செய்யாமல் நடிப்பு மற்றும் பவர் லிஃப்டிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.