Photo Album: காதலுக்கு மரியாதை படத்தில் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா?
காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் தோழியாக நடித்த பூர்ணிமாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதலுக்கு மரியாதை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் சூப்பர் ஹீட் கொடுத்த திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை.
இந்த திரைப்படம் இயக்குனர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.
காதலுக்கு மரியாதை படத்தில் விஜயுடன் ஷாலினி, ராதா ரவி, சிவகுமார், ராதிகா, சார்லி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
பூர்ணிமாவின் தற்போதைய நிலை
இந்த நிலையில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் தோழியாக நடித்திருந்தவர் தான் பூர்ணிமா.
பூர்ணிமா மாடலாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை துவங்கி சினிமாவில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது நடிகை பூர்ணிமா இந்திரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
இதனை தொடர்ந்து நடிகை பூர்ணிமா இந்திரஜித் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |