baakiyalakshmi: இனியாவை வைத்து பழித்தீர்த்த ராதிகா- அவமானத்தில் கையெடுத்து கும்பிடும் பாக்யா
இனியா பிரச்சினையை வைத்து பாக்கியா மீதுள்ள கோபத்தை ராதிகா தீர்த்து கொள்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.
அதே சமயம் இயக்குனர், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் சீரியலின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
அவமானத்தில் தலைகுனிந்த பாக்யா
இந்த நிலையில், இனியா பிரச்சினையை அடிப்படையாக வைத்து பழியை தீர்த்து கொள்ள முடிவுச் செய்த ராதிகா, பாக்கியாவை பிரச்சினை நடந்த இடத்திற்கு வர வைக்கிறார்.
வந்தவுடன் இனியாவிற்கு என்ன பிரச்சினை, எதற்காக இனியா இந்த இடத்திற்கு வந்தார்? என்பதனை புட்டு புட்டு வைக்கிறார்.
இதனால் பாக்யாவிற்கு இனியா மீது கடும் கோபம் வருகிறது, இருந்தாலும் நிறுத்தாமல் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டிருந்த ராதிகா, “ வயசு புள்ளையை பொறுப்பாக வளங்க...” எனக் கூறுகிறார்.
இப்படி ராதிகா பேசியதும் மனமுடைந்து போன பாக்கியா, இனியாவை காப்பாற்றியதற்காக கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறுகிறார்.
இது ஒருபுறம் இருக்கையில் ஈஸ்வரி, இனியாவின் நடத்தை குறித்து திட்டிக் கொண்டு காரில் அமர்ந்திருக்கிறார்.
இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |