பூர்ணாவை உரித்து வைத்த மகன்.. கணவர் வீட்டு விஷேசத்தில் முதல் முறை குழந்தையை காட்டிய தம்பதி
நடிகை பூர்ணாவின் மகன் மற்றும் கணவரின் குடும்பத்தினர் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நடிகை பூர்ணா
Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம்
மலையாள நடிகையான பூர்ணா, “மஞ்சு போலொரு பெண்குட்டி” என்ற மலையாள படத்தில் நடித்த கடந்த 2004 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, தெலுங்கில் வெளியான “மஹாலக்ஷ்மி” என்ற படத்திலும் நடித்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இறுதியாக பரத் நடிப்பில் வெளியாகிய “முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
இதனை தொடர்ந்து மலையாளத்தினை போலவே தமிழிலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
டாப் நடிகையாக வலம் வந்த பூர்ணா மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். பல படங்களில் ஒப்பந்தமாகி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
குடும்ப புகைப்படங்கள்
வெள்ளித்திரையை போன்று சின்னத்திரையிலும் பிரபலமாக இருக்கும் பூர்ணா கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா தற்போது குடும்பத்துடன் உம்ரா சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |