‘அலப்போலேலோ’ பாடலுக்கு கர்ப்பமாக இருந்தது தெரியாமல் நடனமாடிய பூர்ணா!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி, தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அலப்போலேலோ’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாடலில் நடனமாடிய பூர்ணா
இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். பாடலின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
“இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்றது. எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து 5 மாதங்கள்தான் ஆகியிருக்கு.

‘அலப்போலேலோ’ பாடலுக்கு நடனமாடிவிட்டு, அதன் பிறகு ‘அகண்டா’ படப்பிடிப்பிற்குச் சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியவந்தது.
நான் அவ்வளவு கடினமாக நடனம் ஆடியிருந்ததால், இதை என் அம்மாவிடம் கூறியபோது, ‘நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை’ என்று அவர் கூறினார். இருந்தாலும் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தபோது, நான் கர்ப்பமாக இருப்பது உறுதியானது” என்று பூர்ணா தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இரண்டாவது குழந்தையை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்தப் பாடலுக்கு நடனமாடிய சம்பவம்தான் தனது நினைவுக்கு வருவதாகவும் பூர்ணா கூறியுள்ளார்.

ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை!
இதுமட்டுமின்றி, ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தன்னைப் பாராட்டிய சம்பவத்தையும் பூர்ணா பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின்போது தனது கண்களைப் பார்த்த ரஜினிகாந்த், “உங்களுடைய கண்கள் மிகவும் பவர்ஃபுல்லான கண்கள்” என்று பாராட்டியதாக பூர்ணா தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு தனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளதுடன் பூர்ணாவுக்கு பார்ட்டுக்களும் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |