முடிவில்லா காதல்... திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பாவ்னி வெளியிட்ட பதிவு வைரல்!
பிக்பாஸ் புகழ் பாவ்னி-அமீர் திருமணம் முடிந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பாவனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அமீர் - பாவனி
பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி அதை BB ஜோடிகள் ஷோவில் உறுதியாகவும் அறிவித்தனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பாவனி. அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
அதே பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் டான்ஸ் மாஸ்டர் அமீர்.
இருவரும் காதலித்து வந்தநிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பாவனி தனது அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வெளியிட்டு திருமண திகதியை அறிவித்திருந்தார்.
அதே போல் அமீர்- பாவனிக்கு கடந்த 20 ஆம் திகதி திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. திருமணம் முடிந்த நிலையில் பாவ்னி-அமீர் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |