நடிகை ஓவியா வெளியிட்ட சர்ச்சை பதிவு... முதல்வர் விஜய்யின் மேனேஜர் குறித்து கூறியது என்ன?
நடிகை ஓவியா விஜய்யின் மேனேஜர் குறித்து பதிவிட்டு பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஓவியா
தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மலையாள நடிகை ஆவார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.
ஓவியாவின் உண்மையான குணத்தை அறிந்த ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்று ஆர்மி அமைக்கும் அளவிற்கு அவர் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஜுலி ஓவியா இடையே கடும் சண்டை நிலவி வந்ததுடன், ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஓவியா சென்றார்.
இந்நிலையில் ஓவியா நேற்று தனது இன்ஸ்டாகிரம் தளத்தில் முதலமைச்சர் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு
நடிகை ஓவியா இன்ஸ்டாவில் முதல்வர் விஜய்யின் மேனேஜர் ஜேகதீஷ் குறித்து, ரூட் மாபியா அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது ஜெகதீஷ் நடத்திவரும் நிறுவனத்தின் பெயர் ரூட். விஜய், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, சமந்தா, கல்யாணி பிரியதர்ஷன், துஷாரா விஜய், இயக்குனர் அடலி, லோகேஷ் கனகராஜ், வினோத் இவர்கள் இந்நிறுவனத்தி்ன் கீழ் இயங்கும் பிரபலமாம்.

நடிகை பிரியங்கா மோகன் முன்பு இந்நிறுவனத்திலிருந்து விலகியதற்கு சமூகவலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை ஓவியா வெளிப்படையாக பதிவு வெளியிட்டுள்ள நிலையில், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் கவனிக்கப்பட்டு வருகின்றது.
நடிகை ஓவியாவும், ஜெகதீஷும் சில காலம் ஒன்றாக 'லிவிங் டு கெதரில்' இருந்ததாக கோலிவுட்டில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |