பிரபல நடிகையின் வீட்டில் ஏற்பட்ட இழப்பு... வேதனையுடன் வெளியிட்ட பதிவு
பிரபல சீரியல் நடிகையான நிஷாவின் பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தனை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமான நிஷா, அதன் பின்பு மற்றொரு ரிவியில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் இவர், இவன் வேற மாதிரி, நான் சிவப்பு மனிதன், வில் அம்பு போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பாட்டி மறைவு குறித்து வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அதில், தன்னுடைய வாழ்க்கையில் நிரப்பமுடியாத ஒருவரை இழந்துவிட்டேன்.
அது தான் என்னுடைய கமலா பாட்டி, அவர் ஒரு சிறந்த வாழ்க்கைக்கான ஆசிரியர், என்னுடைய காமெடியன், நல்ல நண்பன். இவரது இழப்பை யாராலும் நிரப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று நிஷாவின் கணவரும், பிரபல திரைப்பட நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.