இனிமே முடியாதுப்பா.. சீரியலை ஓரம்கட்டி புதிய தொழிலை ஆரம்பித்த நடிகை! கணவரும் உடந்தையா?
சின்னத்திரை நடிகை நீலிமா ராணி நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு புதிய தொழிலை ஆரம்பித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரைக்கு அறிமுகம்
சினிமாவிற்குள் “ தேவர் மகன்” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா ராணி,
இதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் பெரியளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு வந்து விட்டார்.
இவர் நடிப்பில், மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் ஆகிய தொடர்கள் ஒளிபரப்பானது.
திருமணம்
தன்னுடைய 21 ஆவது வயதில் துணை இயக்குனராக இருந்த இசைவாணன் என்பவரை காதலித்தார்.
தன்னை விட இசைவாணனுக்கு 10 வயது அதிகம் இதன் காரணமாக நீலிமா வீட்டில் யாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஆனால் முயற்சியை கை விடாமல் பிடிவாதம் பிடித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு இரண்டு அழகிய குழந்தைகளும் இருக்கிறார்கள்.
புதிய தொழில்
திருமணத்திற்கு பின்னர் சீரியலிலிருந்து விலகியிருக்கும் நீலிமா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
வாய்ப்பு இல்லாத காரணத்தினால் நடிப்பை விட்டு சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் 'நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை தொடங்கியுள்ளார்.
இந்த அழகு நிலையத்தை பாடகர் எஸ்.பி சரண் திறந்து வைத்தார். மேலும், தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
புகைப்படத்தை பார்த்த நீலிமா ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |