சிவகார்த்திகேயன் ஜோடி நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு - குழந்தையின் அழகிய புகைப்படம் வைரல்!
சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யா பிரபாகர் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிய இவர் 5 வருடத்திற்கு பின் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீப நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தார்.
இவர், சன் குடும்பம் விருதுகள், அமுல் சூப்பர் குடும்பம் மற்றும் இசை திறமை ரியாலிட்டி ஷோ சன் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கியவர்.
விஜய் தொலைக்காட்சில் சில தொடர்கள் மற்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடனமாடி அசத்தினார்.
இதனிடையே, இவருக்கு நவம்பர் 7 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு கல்கி பிரயா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.