பள்ளி பருவத்தில் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? இப்போ இவங்க ஸ்டார் நடிகை!
தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு நடிகையின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட படம் ஒன்று யாரென்று தெரியாமல் மண்டையைக் குழம்பும் வகையில் வைரலாகி வருகிறது.
பள்ளி பருவத்தில் க்யூட் நடிகை
பொதுவாகவே சில சினிமா புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாவது வழக்கம் தான். அவ்வாறு இருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
இவ்வாறு இணையத்தில் தற்போது தீயாய் பரவும் ஒரு புகைப்படம் தான் ஒரு பிரபலமான நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சின்ன வயதிலேயே இந்த நடிகை இவ்வளவு அழகாக இருக்கிறாரே என கருத்துக்களை பதிவிட்டு இது யார் என கண்டுபிடிங்கள் பார்க்கலாம் என்று வைரலாக்கி வருகின்றனர்.
அந்தப் புகைப்படத்தில் இருப்பது நம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். பள்ளி உடையில் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார்.
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார்.
இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். மேலும், தற்போது சினிமாவை விட்டு விலகப் போவதாக தெரிவித்து வருகிறார்.