கோடிகளில் புரளும் நயன்தாராவின் சொத்து மதிப்பு என்ன?
இன்று பிறந்தநாளை கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சொத்து மதிப்பு வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை நயன்தாரா
கேரளாவைச் சேர்ந்த இவர் 1984ம் ஆண்டு பிறந்தார். டயானா மரியம் குரியன் என்பது தான் இவரது பெயர். கல்லூரி படிக்கும் போதே பகுதி நேர மாடலிங் மற்றும் விளம்பர துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் நுழைந்த இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை கட்டிப்போட்ட இவரின் இரண்டாவது படம் ரஜினிகாந்த் உடன் நடித்தார். பின்பு அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாகவே வலம் வருகின்றார்.
சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதல் என்று சர்ச்சையில் சிக்கிய இவர், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்ததோடு, இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்களும் உள்ளனர்.
சொத்து மதிப்பு
இன்று பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்கி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் பிறந்தநாளுக்கு நயன்தாரா கேக் வெட்டும் நிலையில், "என் உயிர் மற்றும் உலகமே இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" எனறு எழுதப்பட்டுள்ளது.
நடிப்பில் மட்டுமின்றி தற்போது தொழிலதிபராகவும் வலம் வருகின்றார். ஆம் பல தொழில்களில் ஆர்வம் கொண்டு அதனை எடுத்து நடத்தி வரும் இவரது சொத்து மதிப்பு 200 கோடிக்கு மேல் என்று கூறப்படுகின்றது. மேலும் ஒரு படத்தில் 5 முதல் 10 கோடி சம்பளம் வாங்குகின்றார்.
அண்மையில் புதிய தொழில் தொடங்கிய இவர், தனியாக ஜெட் விமானம், 1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை வைத்துள்ளாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |