புதிய தொழிலை ஆரம்பித்த நடிகை நயன்தாரா - என்ன தொழில் தெரியுமா?
நடிகை நயன்தாரா முதன்முறையாக தனித்துவமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் அடி எடுத்து வைத்துள்ளார்.
பிசியான நடிகையாக திகழும் நயன்தாரா தற்போது முதன்முறையாக தனித்துவமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கால் பதித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய லிப் பாம் கலெக்ஷன் கம்பெனியான தி லிப் பாம் கம்பெனி எனும் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய பயணத்தை துவக்கியுள்ளார்.
நயன்தாரா முன்னணி தோல் மருத்துவர் டாக்டர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து காஸ்மெடிக்ஸ் வர்த்தக உலகில் ஒரு புதிய பிராண்டை அறிமுகம் செய்வதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளார்.
லிப் பாம்கள் மட்டுமே வழங்கவுள்ள இந்நிறுவனம் 100க்கணக்கான வகைகளில் அதனை வழங்கி சிறப்பிக்கவுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய லிப் பாம் அணிவகுப்பை வழங்கும் நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படவுள்ளது.
நடிகை நயன்தாரா தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களில் மிகச்சிறப்பான செயல்திறன், உயர் பாதுகாப்பு அம்சங்களையே மிக முக்கிய அம்சமாக கருதுவேனென்றும், அந்த இரு அம்சங்களும் இந்த லிப் பாம் கம்பெனி பொருட்களில் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.