சமந்தாவை போல் நோயால் அவதிப்படும் நடிகை! உடலை கூட அசைக்க முடியல - என்ன நோய் தெரியுமா?
நடிகை நந்திதா உடலை அசைக்க முடியாத அளவிற்கு நோய் விழுந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நந்திதா.
இவர் நடிப்பில் முதன் முதலில் “அட்டகத்தி” என்ற திரைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, ”எதிர்நீச்சல்” ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
அரிய நோய் என்ன தெரியுமா?
இந்த நிலையில் சமீபக்காலமாக தமிழ் சினிமா பக்கமே இவரை காணவில்லை.
மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,“ நந்திதா சில வருடங்களாக fibromyalgia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவரால் சிறு வேலைகள் கூட செய்ய முடியாத நிலையில் இருந்தாகவும் கூறியுள்ளார்.
இந்த நோய் தொடர்பில் பெரியளவு விளக்கம் ரசிகர்களிடையே இல்லாத காரணத்தினால் இதனை யாரும் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.
நடிகை சமந்தாவை தொடர்ந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர் நந்திதா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |