கை மட்டுமே 8 கிலோ... அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்: பிசாசின் குழந்தை என ஒதுக்கிய மக்கள்
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அவ்வூர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.
ஊனம், உடல் நலக்குறைப்பாடு, தசை குறைப்பாடு, மூளை வளர்ச்சியின்மை என பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு சிலர் அனுதாபத்தோடு பார்ப்பார்கள், ஒரு சிலர் ஏதோ வேற்றுகிரகவாசி போல் பார்ப்பார்கள்.
குழந்தைகள் கடவுளின் படைப்பு என்பார்கள். ஒரு குழந்தை எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்வது தாய் மட்டும் தான்.
ஒதுக்கி வைக்கப்பட்ட சிறுவன்
இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் 16 வயதான சிறுவன் முகமது கலீம். இவர் மேக்ரோடாக்டிலியால் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் குறித்த சிறுவனின் ஒரு கை எட்டு கிலோ எடையுடனும் ஐந்து விரல்களும் பெரிது, சிறிததாக இருக்கும். இதன்காரணமாக அக்கிராம மக்கள் சிறுவனை “பிசாசின் குழந்தை” என கூறுவார்கள்.
சிறுவனின் தோற்றத்தைக் கண்டு யாரும் நட்பாக பேசுவதில்லையாம், பழகுவதில்லையாம், இவரைக் கண்டு அனைவரும் பயந்து விடுவார்கள் என்று பெற்றோர்கள் சிறுவனை பள்ளிக்கு கூட அனுப்புவதில்லையாம்.
பலனளிக்காத சிகிச்சை
இச்சிறுவனின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். சிறுவனுக்கு 10 வயது இருக்கும் போது அவரது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். அறுவை சிகிச்சைக்குப்பின் சிறுவனின் உடலில் மாற்றம் எற்பட வில்லை. மேலும் சிகிச்சைக்குப் பின்னரே சிறுவனின் கை விரல்கள் பெரிதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அன்றாட தேவைகளுக்கு கூட மற்றவர்கள் உதவியை நாடவேண்டியுள்ளது.
மகனின் இந்த நிலையைக் கண்டு சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் நாட்களைக் கடந்து வருகின்றனர்.