15 ஆண்டுகளாக இளைஞர் அனுபவித்த வலி... மூளையை சோதித்த போது ஏற்பட்ட பேரதிர்ச்சி
சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவருர் கடந்த 15 ஆண்டுகளாக வலிப்பு நோயினால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த வாங்(36) என்ற வாலிபருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதுடன் வாந்தியும் இருந்துள்ளது. சில தருணங்களில் இடதுகையும் காலும் மரத்துப்போவதுடன், அடிக்கடி மயங்கியும் விழுந்துள்ளார்.
இதனால் குடும்பத்தினர் சிகிச்சைக்கு அழைத்துச்சென்று பல சோதனைகள் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் மூளையை ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்ற யோசனை ஏற்பட்ட நிலையில், ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்பொழுது ஒட்டுமொத்த நபரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக மூளையில் நாடாபுழு ஒன்று உயிருடன் இருந்துள்ளது.
மேலும் இப்புழு கொஞ்சம் கொஞ்சமாக மூளையையும் சாப்பிட ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது. பின்பு உயிருடன் ஐந்து இஞ்ச் நீளம் கொண்ட அந்த புழுவினை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். இது எதனால் ஏற்பட்டிருக்கும் என்று யோசிக்கையில், குறித்த இளைஞர் நத்தைகளை விரும்பி சாப்பிடுவதாகவும், இதனால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான புழுக்கள் நாய் மற்றும் பூனையின் சிறுகுடலில் தான் காணப்படும் என்றும் மனிதர்கள் வேகவைக்காத இறைச்சியை சாப்பிடும் போது பரவ வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.