முதல் கர்ப்பத்தை சிலை செய்து வைத்திருக்கும் பிரபலம்! எப்படி செய்திருக்கிறார் தெரியுமா?
தமிழ் பிரபல நடிகை தன்னுடைய கர்ப்பத்தை நினைவில் வைத்திருக்கும் வகையில் சிலை செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் பிரபல்யமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நமிதா. மேலும் இவர் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதுடன் இவர் அணைத்து படங்களும் கவர்ச்சி உடையில் தான் இருந்திருப்பார்.
அந்தளவு கவர்ச்சி குயினாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து சில காலமாக அமைதியாக இருந்த நடிகை நமிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவரின் ரீ என்ட்ரி ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை, அந்தளவு அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார்.

காதல் திருமணம்
மேலும் நமிதா கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்த திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளது.
அவர்கள் இருவரும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பிறந்ததால், அவர்களுக்கு “கிருஷ்ணா ஆதித்யா” மற்றும் “கியான்ராஜ்” என கிருஷ்ணனுடைய பெயரை வைத்துள்ளார்கள்.

வைரலாகும் வீடியோக்காட்சி
இந்நிலையில் இவர் தனது முதல் கர்ப்பத்தை நினைவுப்படுத்தும் வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் வயிற்றின் அச்சையெடுத்து சிலைப்போல் வடிவமைத்து வீட்டில் வைத்துள்ளார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நமிதா ரசிகர்கள் நமிதாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் இது போன்ற நினைவுகள் குறித்தும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.