காதல் பற்றி பேசிய தொகுப்பாளினி... நெத்தியடி பதில் கொடுத்த நமீதாவின் கணவர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், காதலர் தின சிறப்பு போட்டியாளர்களாக இந்த வாரம் நடிகை நமீதா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது கணவருடன் பங்கேற்றிருந்தார்.
அதன்போது நமீதாவின் கணவரும் பிரபல தொழிலதிபருமான வீரேந்திர சவுத்ரி காதல் பற்றி தொகுப்பாளி ஷாலின் சோயாவுக்கு வழங்கிய அறிவுரை இணையத்தில் படு வைரலாகியுள்ளது. இவரின் காதல் குறித்த அருமையான புரிதலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2
சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக தினழ்ந்து வரும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் ரியாரிட்டி நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வாரம் சிறப்பு போட்டியாளர்களாக நடிகை நமீதா தனது கணவருடன் இணைந்து பங்கேற்றார்.
அதன் போது நமீதா கணவர் வீர், காதலை தேடி நீங்க போகாதீங்க உங்களை உண்மையான காதல் தேடி வரும்... என தொகுப்பாளிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். காதல் பற்றி இவர் கொடுத்த அருமையான விளக்கம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |