90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நக்மாவா இது? 50 வயதில் எப்படி இருக்காரு பாருங்க
90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நக்மா தற்போது இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை நக்மா
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நக்மா.
இவர், தமிழில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான “காதலன்”படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பின்னர், அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது என்றே கூறலாம்.
அரசியல் பயணம்
ரஜினியுடன் நக்மா நடித்தபாட்ஷா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பிறகு ரகசிய போலீஸ், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பிஸ்தா, சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இவற்றில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்துடன் நக்மா தமிழ் பக்கமே இல்லாமல் போய் விட்டார்.
கடந்த 2008க்குப் பிறகு சினிமாவில் நடிப்பத்தை நிறுத்தி விட்டு, அரசியலில் முழு கவனத்தையும் காட்டி வந்தார்.
தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க
இந்த நிலையில் சமீபத்தில் ஜோதிகா மகள் தியா பள்ளியில் பட்டம் வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நக்மாவும் நிகழ்ச்சி வந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், 50 வயதை தொட்ட நக்மா தற்போது இப்படியா இருக்கிறார்” என கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |