நடிகை நக்மா அதிரடியாக கைது! பதவி விலக எழும் கண்டனம்;
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுசேரியில் நக்மா தலைமையில் மகிளா காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவியும், நடிகையுமான நக்மா தலைமை தாங்கினார். மேலும், இதில் புதுவை மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, நிர்வாகிகள் அஞ்சலாட்சி, ஜெயலட்சுமி, விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். கலைந்து சென்ற பின்னர் தலைமை தாங்கிய நடிகை நக்மாவை போலீசார் கைது செய்தனர்.. இதனால் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.