எவர்கிரீன் குயின் நதியாவா இது? அழகிற்கு இதுதான் காரணமா..? உங்களுக்காக அந்த இரகசியம்
எவர்கிரீன் குயின் நதியாவின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
90கள் காலப்பகுதியில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நதியா.
இவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் பட்டிதொட்டியில் உள்ள அந்த கால இளசுகளை கட்டி போட்டுவிட்டார்.
தற்போது திருமணமாகி சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் மாத்திரம் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு தற்போது 56 வயதாகின்றது ஆனாலும் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் பார்க்கும் போது கட்டுகோப்பான அழகுடன் இருக்கிறார்.
பிட்னஸ் சீக்ரெட்
இவர் அப்படி என்ன தான் சாப்பிடுகிறார்? இவரின் அழகின் இரகசியம் தான் என்ன? என ரசிகர்கள் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பில் தேடி பார்த்த போது நன்றாக தண்ணீர் குடித்து வெறித்தனமாக நதியா உடற்பயிற்சி செய்வார் என்ற தகவலும் இவர் உடற்பயிற்சி செய்யும் காணொளியும் கிடைத்தது.
இதனை பார்த்த ரசிகர்கள், “ உடற்பயிற்சி தான் பெரும்பான்மையான நடிகைகளின் பிட்னஸ் சீக்ரெட்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |