நடிகர் விஜய்யின் பிட்னஸ் சீக்ரெட் தெரியுமா? தாய் உடைத்த உண்மை இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய்யின் பிட்னஸ் குறித்து அவரது தாய் உண்மையைக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.
கடந்த மாதம் நடிகர் விஜய் அவரது தாய் ஷோபா சந்திரசேகர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகிய நிலையில், இவரது தந்தை ஏன் வரவில்லை என்ற விளக்கத்தை அவரது தாய் அளித்துள்ளார்.
ஷோபா - எஸ்.ஏ.சி ஜோடியின் 50-வது திருமண நாள் கடந்த ஏப்ரல் 24-ந் தேதி கொண்டாடி உள்ளனர். அப்போது திருமண நாள் குறித்து தன் மகனுக்கு போனில் தெரிவித்ததும் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி வந்ததுடன், தனது ஆசையை நிறைவேற்ற என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அன்றைய தினம் எஸ்.ஏ.சி படப்பிடிப்பிற்கு வெளியூர் சென்றதால் வரமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
பிட்னஸிற்கு காரணம்?
நடிகர் விஜய்யின் பிட்னஸ் ரகசியம் தோசை தானாம். காலையில் 2 தோசை, இரவில் 2 தோசை எடுத்துக்கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்வதனால் தான் விஜய் இந்த வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்கிறார் என ஷோபா தெரிவித்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் தோசை தான் விஜய்யின் பிட்னஸ் ரகசியமா? என வாயடைத்துப் போய் உள்ளனர்.