நதியா காதலில் விழுந்தது எப்படி? சுவாரஸ்ய கதை!
இன்றும் அழகு குறையாத எவர்கிரீனாக இருக்கும் நடிகை நதியா, தனது காதல் குறித்து பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
நடிகை நதியா
“ நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு” எனும் மலையாளம் படம் மூலம் 1984ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா.
இதனை தொடர்ந்து சில மலையாளப் படங்களில் நடித்த நதியா 1985ம் ஆண்டு தமிழில் வெளியான “ பூவே பூச்சுடுவா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
80களில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நதியா இன்றளவும் அதே பொலிவு மாறாமல் எவர்க்ரீன் பியூட்டியாகவே வலம் வருகிறார்.
இன்றும் சினிமா படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரின் அழகிற்கு அளவு இல்லாமல் இருக்கின்றது.
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நதியா, தனது காதல் கதை பற்றி கூறியுள்ளார்.
காதல் கதை
அதில், “ என்னுடைய கணவர் என் வீட்டிற்கு முன்னாள் தான் இருந்தார். நான் படங்களில் நடிக்க ஆரம்பித்த போது கணவர் வெளிநாட்டில் படித்து கொண்டிருந்தார்.
அந்த காலத்தில் தொலைபேசி இல்லாத காரணத்தினால் கடிதம் எழுதி தான் பேசுவோம். அப்படி ஒரு நாள் வீட்டில் மாட்டிக் கொண்டோம். என்னுடைய அப்பா வேலை கிடைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என்றார்.
அவருக்கு வேலை கிடைத்ததும் கையில் காசுக்கூட இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். நான் வேறு மதம். அவர் வேறு மதம். எப்படி எங்களுக்குள் ஒத்துவரும் என்று பெற்றோர் கவலைப்பட்டனர்.
ஆனால் எங்களுக்குள் இருந்த காதல் தான் எங்களை சேர்த்தது..” என சந்தோசமாக கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நதியாவிற்குள் இப்படியொரு காதல் இருந்த விடயம் அவரின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |