திருமண நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி... இரண்டாவது முறையாக அம்மாவாகும் மைனா நந்தினி!
Myna Nandhini and Yogesh Expecting Their Second Baby: பிரபல குணச்சித்திர நடிகை நடிகை நந்தினி இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை வீடியோ மூலம் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். குறித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
நடிகை நந்தினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி.

ஆரம்பத்தில் விஜேவாக தனது பயணத்தைத் தொடங்கிய இவர், இந்தத் தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
தொடர்ந்து சின்னத்திரை தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ‘வம்சம்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘விக்ரம்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

சமீபத்தில் சொந்தமாகப் புதிய வீடு கட்டிய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட மைனா நந்தினி, தற்போது மற்றுமொரு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளார்.
தனது திருமண நாளைக் கொண்டாடிய மைனா நந்தினியும் அவரது கணவர் யோகேஷும், தாங்கள் இரண்டாவது முறையாக பெற்றோராகப் போகும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |