சர்ச்சைகளுக்கு பேர் போன ஆன்மீகப் பேச்சாளரை காதலிக்கும் மிருணாளினி ரவி! வைரல் புகைப்படங்கள்
mirnalini ravi viral post : நடிகை மிருணாளினி ரவி தனது காதலரை சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும், அதனுடன் இணைந்துள்ள பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை மிருணாளினி ரவி
டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் முதலில் பிரபலமான மிருணாளினி ரவி, பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் ஏலியன் பெண் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ஜூங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த 'ரோமியோ' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, தனது புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை மிருணாளினி ரவி தற்போது வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், மஹாவிஷ்ணு என்பவரையே தான் காதலித்து வருவதாகவும், இருவரும் சுமார் 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நிலையில், அந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மிருணாளினியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
குறிப்பாக, மிருணாளினி குறிப்பிட்டுள்ள மஹாவிஷ்ணு, பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் கடந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக செய்திகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |