தனது கணவரை அறிமுகப்படுத்திய குட்நைட் பட நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்
தனது வருங்கால கணவரை குட்நைட் பட நடிகை மீதா ரகுநாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மீதா ரகுநாத்
மீதா ரகுநாத் முதன் முதலில் முதல் நீ முடிவும் நீ படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதற்கு பின்னர் தான் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் இவர்பல ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் மூலம் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்டார் மீதா ரகுநாத்.
இந்த நிலையில் இவர் தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கப்போவதாதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவதுடன் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.