இதெல்லாம் உண்மையா? மீரா மிதுன் கிளப்பி விட்ட புது கதை- கொதிப்பில் இணையவாசிகள்
மீரா மிதுன் கிளப்பிட்ட புது கதை இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
மீரா மிதுன்
பிரபல மாடலாக இருந்தவர் தான் நடிகை மீரா மிதுன்.
இவர், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சி பிரபலமாக கலந்து கொண்டார்.
சக போட்டியாளர்களிடம் வாக்கு வாதம், சண்டைகள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்பட்டது. அத்துடன் இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதனை தொடர்ந்து மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டை கமல்ஹாசன் பொய் என நிரூபித்து, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பின்னர் மீரா மிதுன், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன், சேரன், முகேன் ராவ், தர்ஷன் என பலரையும் விளாசி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாரித்து கொண்டார்.
ஜெயலலிதா அம்மா பதவி எனக்கு தான்..
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன் புது கதையொன்றை கிளப்பி விட்டுள்ளார்.
அதாவது, "பிரபல நடிகை ஜெயலலிதா இறந்த பின்னர் அவரின் இடத்திற்கு மீரா மிதுன் தான் தெரிவு செய்யப்பட்டாராம். ஆனால் அவருக்கு ஒரு கூண்டில் இருக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் அவருடைய அதிகாரத்தை இன்னொருவருக்கு கொடுத்துள்ளாராம். அவரும் தற்போது எனக்கு கீழ் தான் வேலைப் பார்க்கிறார்...” என பேசியிருக்கிறார்.
இந்த காணொளி இணையவாசிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவுக்கு கீழ் விமர்சனங்களை கொட்டி வருகிறார்கள்.
அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் பற்றியும், அவரின் குடும்ப வாழ்க்கை பற்றியும் அவதூறாக பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |