40 வயதில் இப்படியொரு அழகா? நடிகை மீனா வெளியிட்ட காணொளி
நடிகை மீனா தற்போது வெளியிட்டுள்ள கியூட்டான காணொளி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை மீனா
1982ல் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை மீனா. அதன்பின் ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்கள் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த மீனா, ரஜினியுடன் ஜோடியாக நடித்து சிறு வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகினார்.
சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் பயணித்ததை கொண்டாடி ஒரு நிகழ்ச்சியையும் பிரபல ஊடகம் நடத்தியது.
கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு மாறிய மீனாவிற்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது.
மீனா 40 நிகழ்ச்சிக்கு பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு அவரைப் புகழ்ந்து பேசினர். இதற்காக மீனா வாங்கிய சம்பளம் 13 லட்சம் என்ற தகவலும் வெளியானது.
மீனாவின் கியூட் காட்சி
நடிகை மீனா கணவர் இறந்த பின்பு தற்போது இயல்பு நிலைக்கு மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த காட்சி சில நொடிகள் மட்டுமே என்றாலும் மீனாவின் அழகு வேற லெவல் என்று தான் கூற வேண்டும். குறித்த காட்சியினை நீங்களே காணலாம்.
?❤️self love pic.twitter.com/rJ3TJ192ob
— Meena Sagar (@Actressmeena16) June 3, 2023
