தோழியுடன் சுற்றுலா சென்ற இடத்தில் மீனா செய்த காரியம்! காணொளியால் ஷாக்கான ரசிகர்கள்
நடிகை மீனா தன்னுடைய கணவரின் மறைவுக்குப் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில், தனது தோழியுடன் சுற்றுலா சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை மீனா.
தன்னுடைய மகளையும் தமிழ் சினிமாவில் தன்னை போலவே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். தெளி படததில் நைனிகா நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்று காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த நிலையில், கணவரின் பிரிவால் மிகவும் நொறுங்கிப் போனார்.
இதனால் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருந்த மீனவை அவரது தோழிகளான ரம்பா, கலா மாஸ்டர், சினேகா, ப்ரீது்தா ஹரி போன்ற நடிகைகள் வெளியே அழைத்துச் சென்று வருகின்றனர்.
தோழியுடன் மீனா சென்ற சுற்றுலா
தற்போது பிரபலங்களுக்கு மேக் அப் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் பிரபல பியூட்டி பார்லர் உரிமையாளர் ரேணுகா பிரவீன் உடன் மீனா சுற்றுலாவிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவரும் ஆட்டம், பாட்டம், என மகிழ்ச்சியாக இருக்கும் சில வீடியோக்களை வெளியிட அந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் பலரும் மீனாவின் மாற்றத்தை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.