நடிகை மீனா போட்ட ட்வீட்! இவருக்குள் இப்படியொரு பொறாமையா? விக்ரம் அளித்த பதில்
இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
பொன்னியின் செல்வன்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் கடந்த 30ம் தேதி உருவாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 60 ஆண்டுகால போராட்டத்துக்கு பின் தற்போது திரை வடிவம் கண்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனரான மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
வசூலில் சாதனை
இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், அதேபோல் இப்படத்தின் இந்தி பதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.
ரசிகருக்கு விக்ரமின் பதில்
ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பல வருடங்களாக திரையரங்குகளுக்கு சென்று படம் எதுவும் பார்க்காத வயதானவர்கள் கண்டிப்பாக பொன்னியின் செல்வன்-1 படத்தை நேரில் பார்க்க வரக்கூடும், அதனால் திரையரங்கில் அவர்களுக்கான வசதிகளை முறையாக செய்து தர வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார்.
இவரது டீவீட்டிற்கு பதிலளித்த விக்ரம், 'உங்களின் அன்பும் அக்கறையும் கலந்த உங்கள் கருத்துக்கு நன்றி, நிறைய பிள்ளைகள் நமது பெருமைமிக்க வரலாற்றை திரையில் காண்பிக்க அவர்களது பெற்றோர்களை அழைத்து வருவார்கள், நானும் என் அம்மாவை அழைத்து செல்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பிலும் திரையரங்கிற்கு வரும் வயதானவர்களுக்கு முடிந்த உதவியை திரையரங்கு உரிமையாளர்கள் செய்து தர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
All theater owners please be senior citizens friendly. Grannies who have never been to theatres for years will be coming to watch #PonniyinSelvan1. My mom who has never been to theatre in last 40 years is visiting @_PVRCinemas @LycaProductions @chiyaan @MadrasTalkies_
— srihariprasad k (@dearhari2001) September 27, 2022
பொன்னியின் செல்வன் குறித்து மீனா
இப்படத்தினைக் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மீனா ஒரு அடி மேலே சென்று முதன்முதலாக பொறாமை கொண்டதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
''இனிமேலும் என்னால் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. இது என்னை திணறடிக்கிறது; மனதை விட்டு சொல்லியே ஆக வேண்டும். எனக்குப் பொறாமையாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீது வாழ்க்கையில் முதல்முறையாக பொறாமை கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று பதிவிட்டிருந்ததை ரசிகர்கள் தற்போதும் வைரலாக்கி வருகின்றனர்.
Ok, I can't keep it under wraps anymore. It's suffocating me. Wanna take off my chest... For the 1st time in my life I'm feeling jealous of someone. Aishwarya Rai Bachchan Cos she got to play MY dream character NANDINI in PS1 ? Wishing the cast & crew All the Best for success ? pic.twitter.com/M5ESVddbMb
— Meena Sagar (@Actressmeena16) September 29, 2022