உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய மீனா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
நடிகை மீனா 2023ம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் உலக கோப்பை போட்டியின் உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை மீனா, கடந்த ஆண்டு தனது கணவரை இழந்து தற்போது தனது மகளுடன் வசித்து வருகின்றார்.
கணவரை இழந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்ட இவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அவர் கொடுத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், சுமார் 10 நாட்டைச் சேர்ந்த அணிகள் இதில் கலந்து கொண்டு விளையாட உள்ளது.
இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய நடிகையான மீனா 2023ம் ஆண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துள்ளார்.
ஆம் நடிகை மீனா இந்த போப்பையை பாரீசில் அறிமுகம் செய்து வைத்துள்ளதுடன், இந்த புகைப்படத்தினை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை சேர்த்துள்ள மீனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
புகைப்படமாக வெளியிட்ட மீனா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் தனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றிருந்தாலும், நடிகை மீனா தமிழருக்கே உரிய ஆடையான சேலையில் காணப்பட்டுள்ளது இன்னும் சிறப்பை சேர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |