சாலையில் நின்று உடைமாற்றிய நடிகை மீனா! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்
பிரபல நடிகர் ராஜ்கிரண் நடிகை மீனா குறித்து வெளிப்படையாக பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மீனா ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இவரது நடிப்பு இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது.
மீனாவைக் குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறுகையில், நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீனாவின் டெடிகேசனை தற்போதுள்ள நடிகைகளிடம் பார்க்க முடியாது.
ஒருமுறை பாடல் காட்சி ஒன்றிற்கு உடை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பொழுது எதையும் யோசிக்காத மீனா கார் மறைவில் நின்று கொண்டு உடையை மாற்றினார்.
மேலும் தன்னை சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்தில் பார்த்தாலும் மீனா பயப்படுவார் என்று ராஜ்கிரண் கூறியுள்ளார். இவர் மீனாவைக் குறித்து வெளியிட்டுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.