கணவர் எதனால் இறந்தார்? வித்யாசாகரின் மரணம் குறித்து மீனாவின் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மீனா கணவர் வித்யாசாகரின் இறப்பிற்கு பின்பு தனது முதல் பேட்டியை பிரபல தனியார் சேனலுக்கு கொடுத்துள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளில் அசத்தி வந்த மீனா, 2வது என்ட்ரியில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.
இவருக்கும், வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு, திருமணம் நடந்து முடிந்தது, இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் குடும்பத்துடன் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இவரது கணவர் வித்யாசாகருக்கு மட்டும் நுரையீரல் பிரச்சனை இருந்ததால் பாதிப்பு தீவிரமாகியது.
புறாவின் எச்சம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் உடலில் பரவும் ஒரு வித கிருமி பாதிப்பு காரணமாக நுரையீரல் பிரச்சனை உருவாகி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
பின்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் 28ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணம் மீனாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியதோடு, இவரது இறுதி சடங்கையும் மீனா தான் செய்து முடித்தார். இதனை அவதானித்த ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்கலங்கினர்.
தோழிகள் மூலம் மீண்ட மீனா
கணவரின் இறப்பினால் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருந்த மீனாவை அவரது தோழிகளான ரம்பா, கலா மாஸ்டர், சினேகா, ப்ரீது்தா ஹரி போன்ற நடிகைகள் வெளியே அழைத்து சென்று அவரது கவலைகளை நீக்கினார்.
பின்பு எந்தவொரு ஆடம்பர மேக்கப் இல்லாமல் தனது பிறந்தநாளை கொண்டாடியதுடன், நடிகை ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.
பிரபல பியூட்டி பார்லர் உரிமையாளர் ரேணுகா பிரவீன் உடன் மீனா சுற்றுலா சென்றதும், அவருடன் மகிழ்ச்சியாக வெளியிட்ட காட்சியும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கணவர் மரணம் குறித்து ஓபன் டாக்
கணவரின் இறப்பிற்கு பின்பு தனது முதல் பேட்டியில், தான் இவ்வளவு தைரியமாக இந்த நிலையிலிருந்து மீண்டு வந்ததற்கு தனது அம்மா முக்கிய காரணம் அவர் மிகவும் துணிச்சலானவர்.
தான் நடிக்கும் படத்தினைக் கூட தனது அம்மா தான் தெரிவு செய்வார் என்றும் இவ்வளவு படம் நடித்து வரும் தனக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது. தனது தந்தையே தன்னுடைய படம் குறித்த தேதி, ஆடிட்டிங் இவை அனைத்தையும் கவனித்து கொள்வார் என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னைச் சுற்றி நல்ல இதயம் படைத்த நபர்கள் அதிகமாகவே இருந்தார்கள். தான் இவ்வளவு தூரம் வந்து பேட்டி கொடுக்கிறேன் என்றால் தனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த அனைத்திற்கும் காரணம் தனது பெற்றோர்களும், தன்னுடைய தோழிகளும் தான் என்கின்றார்.
இந்த மாதிரியான சூழ்நிலையின் போதே தன்னுடன் இருப்பவர்களை தெரிந்து கொண்டேன். தனது கணவருக்கு எனது தோழிகள், தன்னுடன் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரையும் தெரிந்தாலும், கூச்ச சுபாவம் கொண்ட அவருக்கு மீடியா வெளிச்சம் என்பது பிடிக்காது.
தனது தோழிகள் தனக்காக வந்து காத்திருப்பதுடன், உடன் இருந்து தன்னை அழைத்துச் செல்வதுடன், தான் வரவில்லை என்றாலும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதை தான் படத்தில் தான் பார்த்திருக்கிறேன் என்று வியப்பில் கூறியுள்ளார். தற்போது வரை தினமும் தனக்கு போன் செய்வது வீட்டிற்கு வருவது என்றே கூறுக்கின்றனர்.
கணவரின் இறப்பிற்கு புறா எச்சம் காரணமா?
தனது கணவர் தங்கியிருந்து அப்பார்மண்ட் பகுதிகளில் புறா அதிகமாகவே இருந்தது. அதன் இறகுகள், மற்றும் எச்சம் இதுவே அவரது நுரையீரல் பாதிப்பிற்கு காரணம்... ஆனால் இந்த பாதிப்பிற்கான எந்தவொரு அறிகுறியும் தெரியவில்லை... பின்பு பாதிப்பை அறிந்து சிகிச்சை எடுத்து சரியானார்.
அதன் பின்பு கொரோனா தாக்கத்திற்கு பின்பு அனைவரும் சுகமான நிலையில், தனது கணவருக்கு மட்டும் நுரையீரல் பிரச்சினை இருந்ததும் அத்தருணத்தில் தெரியவில்லை. பின்பு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யும் நிலைக்கு சென்றுவிட்டது.
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையும் மருத்துவ ரீதியான அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். நாங்கள் எளிதில் கிடைத்துவிடும் என்று நினைத்தோம். அதில் பல சிக்கல்கள் இருந்தது பின்பு தான் தெரியவந்தது என்று கூறியுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு தனது கண்களை தானம் செய்தேன்... ஆனால் உறுப்புகள் தானம் குறித்து அப்போது தெரியாது... தற்போது தெரியவந்த பின்பே தனது அனைத்து உறுப்புகளையும் தானம் செய்வதற்கு முடிவு செய்தேன்... கமல் சார் முன்னே உறுப்புகள் தானம் செய்துள்ளார் என்று கூறினார்.
கணவரின் இறுதி சடங்கு
கணவரின் இறுதி சடங்கினை தான் செய்தது குறித்து, அவர் தன்னுடைய கணவர்.... மற்றவர்கள் ன்னை எப்படி கேள்வி கேட்க முடியும்?... தொலைநோக்கு பார்வை கொண்ட அவரின் செயல்களை அனைத்தையும் வைத்திருக்கும் நான் செய்தது எனக்கு தவறாக தெரியவில்லை.
தனது தந்தை இறந்த போது மருமகன் என்ற இடத்திலிருந்த தனது கணவரையே செய்யக்கோரினார்கள். ஆனால் அவரோ நான் வெளியில் இருந்து வந்தவன்... உனக்கு தந்தை அவரது இறுதி சடங்கை நீயே சென்றே கூறினார். அப்பொழுது மீனா நீங்களும் அவருக்கு மகன் தான் என்று தான் செய்யாமல் கணவரை செய்யக் கோரியுள்ளாராம்.
எல்லோரும் இந்த உலகத்திற்கு வருகிறோம்... ஒரு செல்ல போகிறோம்... அதனால் மனிதாபிமானத்தோடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.