ரஜினியைப் பார்த்து கண்ணீர் சிந்தி அழுத விக்னேஷ் சிவன்... தீயாய் பரவும் புகைப்படம்
இன்று ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவ்வப்போது காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது எமேஷ்னலான புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
விக்னேஷ் சிவன் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தான் ரஜினியை முதன்முதலாக சந்தித்த தருணத்தினை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், " முதல்முறையாக உங்களை சந்தித்தபோது என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை தலைவா...
திரைத்துறையில் உள்ளவர்களும் சரி, உங்களை தெரிந்தவர்களும் சரி.. உங்களை ஆழமாக நேசிப்பதற்கு காரணம் நீங்கள் ஒரு நல்ல மனிதர். விசுவாசமான ரசிகர்களின் அன்பு என்றென்றும் தொடரும். கூலி படம் வெற்றியடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ரஜினியைப் பார்த்ததும் விக்னேஷ் சிவன் கண்ணீர் சிந்தி அழுதுள்ளார். இந்த புகைப்படத்தினை தற்போது வெளியிட்டு கூலி திரைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
